http://mbimb.org/wp-content/uploads/2022/09/cropped-Hearts.png
My Body Is My Body Foundation

Tamil – என் உடல் என் உடல்

அனைவருக்கும் வணக்கம்! எனது உடல் எனது உடல் திட்டத்திற்கு வரவேற்கிறோம்!


என் உடல் என் உடல் புரோகிராமிற்கு வரவேற்கிறோம்.
இது மிகவும் வெற்றிகரமான, நேர்மறை மற்றும் வேடிக்கையான மியூசிக்கல் ” Body Safety ” புரோகிராம்களில் ஒன்றாகும். பள்ளிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் வீடுகளில் உள்ள குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் எங்கள் புரோகிராமானது அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆதார வளங்களும் பயன்படுத்தவும் பகிர்ந்து கொள்ளவும் இலவசம்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கான குழந்தையை தவறாக நடத்துதலின் விளைவுகள்

பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் சமூகத்திற்கான ஒட்டுமொத்த குழந்தை துன்புறுத்தலின் விளைவுகள் கணிசமானவை, மேலும் இது நிகழாமல் தடுப்பதற்கான சிறந்த வழிகளில் கல்வியும் ஒன்றாகும். குழந்தை துஷ்பிரயோகத்தைத் தடுப்பதும் குழந்தைகளைப் பாதுகாப்பதும் எங்கள் நோக்கமாகும், ஆனால் ஒரு குழந்தை ஏற்கனவே தவறான சூழ்நிலையில் இருந்தால், என் உடல் என் உடல்புரோகிராம் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் யாரிடம் சொல்ல வேண்டும் என்ற அறிவை வழங்கும், அதனால் அவர்கள் முயற்சி செய்து உதவி பெறலாம். துஷ்பிரயோகம் நிகழும் முன்பே குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரை அணுகி கற்பிப்பதே எங்களின் முன்னுரிமையாகும்.

எங்களின் சர்வதேச குழந்தை துஷ்பிரயோக தடுப்பு புரோகிராம் பின்வருவனவற்றை கொண்டுள்ளன:

பல மொழிகளில் முழு .pdf பதிவிறக்கங்கள்

துஷ்பிரயோகத்தைத் தடுக்க ஆறு பாடல்கள்

ஒவ்வொரு பாடலுக்கும் படிப்படியான வழிமுறைகள்

குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கான யோசனைகள்

கவனிக்க வேண்டிய துஷ்பிரயோகத்தின் அறிகுறிகள்

பல பயனுள்ள தகவல்கள்

“பாடி சேஃப்டி” என்ற விஷயத்தைப் பற்றி குழந்தைகளுக்கு நாம் எவ்வளவு முன்னதாகக் கற்பிக்க முடியுமோ அவ்வளவு சிறந்தது, மேலும் இந்த புரோகிராமானது 3 வயதுடைய குழந்தைகளிடமிருந்து வேலை செய்கிறது என்பதை நான் அறிவேன், ஏனெனில் இந்த திட்டம் உலகெங்கிலும் உள்ள 1.3 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.

என் உடல் என் உடல்புரோகிராமின் அழகு என்னவென்றால் இதை யார் வேண்டுமானாலும் கற்றுத்தரலாம். சமூக சேவையாளர்கள், ஆசிரியர்கள், டேகேர் வழங்குநர்கள், பெற்றோர்கள், பள்ளிக்குப் பிறகான புரோகிராம் வழங்குநர்கள், ஸ்போர்ட்ஸ் கிளப் அமைப்பாளர்கள் மற்றும் பலர். இது எளிமையானது, மறக்கமுடியாதது மற்றும் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்தொடர்பு சேனல்களைத் திறக்கிறது, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஏன் இசை?

பாடல்கள் ஊடாடும் வகையில் இருப்பதால் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும் முக்கியமான செய்திகளை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள இவையும் ஒரு அற்புதமான வழியாகும். நீங்கள் சிறுவயதில் ஒரு குழந்தையாக இருக்கையில் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட சிறிய பாடல்கள் உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் பாடல்களும் செய்திகளும் குழந்தைகளுடன் தங்கி, எதிர்கால வாழ்க்கைப் பாடங்களுக்கு ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும்.

ஜர்னல் ஆஃப் மியூசிக் தெரபியில் வெளியிடப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய ஒரு ஆய்வில், இசை மற்றும் புதிய பாடல்களைக் கற்றுக்கொள்வது என்பது மிகவும் நேர்மறையான சுய-கருத்து மற்றும் சுயமரியாதையின் வளர்ச்சியுடன் தொடர்புடையதாகவும், குழந்தைகள் தங்களைப் பற்றி நன்றாக உணர உதவுவதாகவும் காட்டுகிறது.

*தி பவர் ஆப் மியூசிக் – யூனிவர்சிட்டி ஆப் லண்டன்

இந்த புரோகிராமை எவ்வாறு பயன்படுத்துவது:

இதை வேடிக்கையாக வைத்திருங்கள் –

பாடல்கள் வேடிக்கையானவை, சிந்தி(Cynthie) என்று அழைக்கப்படும் ஒரு கதாபாத்திரத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நேர்மறையான அனிமேஷன்கள். இது செய்தியை எளிமையாக வைத்திருக்க உங்களுக்கு உதவும். இணைந்து பாடுங்கள், கை அசைவுகள் செய்யுங்கள், நடனமாடுங்கள் மற்றும் செய்தியை மறக்கமுடியாததாக ஆக்குங்கள்.

எளிமையாக வைத்திருங்கள் –

இளம் குழந்தைகள் துஷ்பிரயோகம் பற்றிய எந்தவொரு ஆழமான விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்கு வெறும் எளிய விதிகளைக் கொடுங்கள்:

  1. உங்களை யாரும் துன்புறுத்த கூடாது
  2. உங்கள் அந்தரங்க பாகங்களை யாரும் தொடக்கூடாது
  3. உங்கள் அந்தரங்க பாகங்களை யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது
  4. உங்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால், யாரிடமாவது சொல்லுங்கள்
  5. உங்களை யாரேனும் துன்புறுத்தினால் அதை ரகசியமாக மறைக்காதீர்கள்
  6. நீங்கள் தவறான முறையில் துன்புறுத்தப்பட்டால் யாரிடமாவது சொல்லுங்கள்

நேர்மறையாக வைத்திருங்கள் –

குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும், அதனால் அவர்கள் தங்கள் உடலைப் பற்றி நேர்மறையாகவும் மற்றும் ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் அதுகுறித்து பேசுவதற்கு யாராவது இருக்கிறார்கள் என்பதை அறிவதில் பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள்.

All Languages

Hearts

The Songs

Song 1

பாடல் 1. என் உடல் என் உடல்

"

வணக்கம், என் பேரு சிந்தி. நாம இன்னிக்கி என் உடம்பு என்னோடது அப்படிங்கற நிகழ்ச்சில கலந்துக்க போறோம். பாட்டு பாடி, விளையாடி, நாம எப்படி பாதுகாப்பா இருக்க முடியும்னு தெரிஞ்சிக்க போறோம்.

உங்களுக்கு தெரியுமா, நம்ம உடம்பு ரொம்ப சிறப்பானது. யாருக்கும் நம்மை துன்புறுத்தவோ, இல்ல சில  உடல் பாகங்களை தொடவோ, நம்மை சங்கடப்பட வைக்கவோ உரிமை இல்லை. ஏன்னா இது நம்மோட சிறப்பான உடம்பு. இப்போ நாம முதல் பாட்டை பாட போறோம். நீங்களும் என்னோட பாருங்க. இந்த பாட்டு – என் உடம்பு என்னோடது.

"

Song 2

பாடல் 2 உங்களுக்கு சரின்னு தோணாததை , செய்யாதீங்க 

"

அடுத்த பாட்டு நம்மை குஷி அடைய செய்யும்.
எப்பவும் ஞாபகம் வச்சிக்கோங்க
என்னன்னா  – உங்களுக்கு சரின்னு தோணாததை செய்யாதீங்க!!
இப்போ வீட்டுப்பாடம் செய்யறது, உங்க அறையை ஒழுங்கு படுத்தறதை பத்தி நான் பேசப்போறேன்.

யாரவது உங்களை அவங்களோட, ஒரு இடத்துக்கு வரச் சொன்னாலோ அல்லது உங்களை ஒரு செயலை செய்யச்சொன்னாலோ, அது உங்களுக்கு சரியாக தோணலைனா செய்யாதீங்க.

"

Song 3

பாடல் 3 "இப்படி நடந்தா" பாடல் வரிகள்  

"

இப்ப நாம “இப்படி நடந்தா” விளையாட்டு விளையாட போறோம். இது மூலமா நாம உங்களை யாராவது அவங்களோட போக சொன்னாலோ, அல்லது சில தனியான பாகங்களை தொட முயற்சி செய்தாலோ என்ன செய்யணும்னு தெரிஞ்சிக்க போறோம். உங்க தனியான பாகங்கள்னா என்னனு தெரியுமா? அதை தான் உங்க ஜட்டி மறைக்குது. உங்களோட கால்களுக்கு நடுவே உள்ள அந்த தனியான பாகங்களை நீங்க ரொம்ப சின்ன குழந்தையாக இருக்கும் போது உங்க அம்மாவோ அப்பாவோ கழுவி விட்டிருப்பாங்க. அல்லது உடம்பு சரி இல்லேன்னா உங்க அம்மா, அப்பா அல்லது டாக்டர் மருந்து தடவி விட்டிருக்கலாம். ஆனால் இப்போ வேறு யாரும் அந்த பாகங்களை தொட அனுமதிக்கக் கூடாது.

உங்க வீட்டிலேயோ வெளியிலோ யாராவது உங்களை சங்கடப்படுத்தினாலோ அல்லது தனியான பாகங்களை தொட்டாலோ நீங்க “வேண்டாம் ” னு சத்தமா கத்தணும் . அதை தான் இந்த விளையாட்டில் நாம பாக்க போறோம்.

"

Song 4

பாடல் 4 உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் 

"

யாரவது உங்களை சங்கடப்படுத்தினாலோ, அல்லது தனியான பாகங்களை தொட்டாலோ, நீங்கள் மிக பயந்தாலோ, அல்லது அவமானமாக உணர்த்தாலோ, அதை யாரிடமாவது சொல்ல வேண்டியது மிக அவசியம்.

இதை நீங்க உங்கள் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, ஆசிரியர், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், நண்பர்கள், போலீஸ்காரர், உங்கள் நண்பர்களின் பெற்றோர், அல்லது மருத்துவரிடம் தெரிவிக்கலாம். சில நேரங்களில் நீங்கள் சொல்பவர், உங்களை நம்பாமல், இந்த விஷயத்தை ரகசியமாக வைத்து கொள்ள சொல்லலாம். ஆனால் நீங்கள் சோர்ந்து விடாமல், மீண்டும் மீண்டும், வேறு யாரிடமாவது சொல்லி அவர்கள் நீங்கள் சொல்வதை கேட்க வைக்க வேண்டும்.

"

Song 5

பாடல் 5 அன்பு மென்மையானது 

"

சரி, இப்போ நாம அன்பை பற்றி பேசலாம். நாம் நேசிக்கப்படுவது மிக முக்கியம். 
ஆனால் உங்கள் மீது அன்பு கொண்டவர் உங்களை துன்புறுத்தியோ சங்கடப்படுத்தியோ அதை வெளிப்படுத்த மாட்டார். 
உங்களுடன் விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது, நடைப்பயிற்சி செய்வது, உங்களுக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கொடுப்பது  போன்ற உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தே மக்கள் தங்கள் அன்பினை வெளிப்படுத்துவர்.

அன்பு என்பது ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு நேசிப்பது. நம் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் நாம் சுத்தமாக  இருக்கிறோமா, தூய்மையான உடைகளை அணிகிறோமா, ஆரோக்கியமாக இருக்கிறோமா என்று கவனித்து நாம் ஆரோக்கியமாக, சந்தோஷமாக, உடல் உறுதியுடன் வளர உதவுகிறார்கள்.

"

Song 6

பாடல் 6 இரகசியங்கள்

""

cropped-cropped-Hearts.png

Signs of Child Abuse

குழந்தை துஷ்பிரயோகத்தின் அறிகுறிகள்

(வயது வந்தவர்கள் அல்லது குழந்தை) – ஒரு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் போது குழந்தை துஷ்பிரயோகம் நடக்கிறது. இது உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ இருக்கலாம், ஆனால் இது அன்பு, கவனிப்பு அல்லது பராமரிப்பு இல்லாமையையும் உள்ளடக்கியிருக்கலாம். புறக்கணிப்பு மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமானது உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போலவே தீங்கு விளைவிக்கும், எனவே துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளைப் பார்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு குழந்தை ஒன்றுக்கு மேற்பட்ட துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம், எனவே பின்வருபவை ஒரு வழிகாட்டுதல் மட்டுமே. ஒரு குழந்தையின் நடத்தையில் வித்தியாசமான மாற்றங்களை நீங்கள் கண்டால், பின்வருவனவற்றில் ஏதேனும் பொருந்துகிறதா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இவைகள் குழந்தைகளிடம் நீங்கள் காணக்கூடிய துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பின் குறிகாட்டிகள். இந்த குறிகாட்டிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பார்த்தாலோ அல்லது ஒரு குழந்தை உங்களிடம் தகவலை வெளிப்படுத்தினாலோ:
1. அமைதியாக இருங்கள் மற்றும் தகவலை கொடுக்க குழந்தையை கட்டாயப்படுத்த வேண்டாம்.
2. குழந்தையை ஆறுதல்படுத்தி, உங்களுடன் பகிர்ந்ததற்கு அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள், பின்னர் உங்களின் தொடர்புடைய குழந்தைப் பாதுகாப்புச் சேவைகளுக்குத் தெரிவிக்கவும்.
3. உங்கள் எதிர்வினையானது அமைதியாகவும் ஆதரவாகவும் இருப்பதைக் காணும் வரை, ஒரு குழந்தை ஒரு நேரத்தில் ஒரு சிறிய தகவலை மட்டுமே வெளியிட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பின்வருபவை துஷ்பிரயோகத்தின் சில அறிகுறிகள்.
உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் அறிகுறிகள்

குழந்தையின் தோற்றம்
* வழக்கத்திற்கு மாறான சீராய்ப்புகள், காயவடுக்கள், தீக்காயங்கள் அல்லது எலும்பு முறிவுகள்
* கடித்த அடையாளங்கள்
* அடிக்கடி ஏற்படும் காயங்கள் எப்போதும் தற்செயலானவை என்று விளக்கப்படுகிறது
* ஒரு விளக்கம் காயத்துடன் பொருந்தவில்லை என்றால்
* காயங்களை மறைக்க நீண்ட கை அல்லது மற்ற மறைக்கும் ஆடைகளை அணிதல்

குழந்தையின் நடத்தை
* சந்தோசமற்று இருத்தல், பழகுவதில் கடினம்
* வழக்கத்திற்கு மாறாக கூச்சமடைவது, மற்றவர்களைத் தவிர்ப்பது
* அதிக கவலையாக இருத்தல்
* பெற்றோருக்கு பயப்படுதல்
* பெற்றோரைப் பிரிந்திருப்பதில் சிறிதளவோ அல்லது துன்பமோ இல்லாமை

புறக்கணிப்பின் அறிகுறிகள்
குழந்தையின் தோற்றம்
* மோசமான சுகாதாரம், அழுக்கான தலைமுடி, உடல் துர்நாற்றம்
* வானிலைக்கு பொருத்தமற்ற ஆடைகள்
* மருத்துவம் அல்லது பல் பராமரிப்பு தேவையில்

குழந்தையின் நடத்தை
* அடிக்கடி சோர்வு, எனர்ஜி இல்லாமை, மந்தத்தன்மை
* உணவை பிச்சை எடுப்பது அல்லது திருடுவது
* அடிக்கடி தாமதமாக வருவது அல்லது பள்ளிக்கு வராமல் இருப்பது
* மீறும் நடத்தை
* சுயமரியாதை குறைவு

உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தின் அறிகுறிகள்
குழந்தையின் தோற்றம்
நிச்சயமாக துஷ்பிரயோகத்தின் பிற வடிவங்களில் விட அறிகுறிகள் குறைவாக இருக்கலாம், நடத்தை சிறந்த அறிகுறியாக இருக்கலாம்.
* நண்பர்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளில் இருந்து விலகுதல்
* அடிக்கடி தாமதமாக வருவது அல்லது பள்ளிக்கு வராமல் இருப்பது
* சுயமரியாதை இழப்பு
* மீறும் நடத்தை
* பள்ளி செயல்திறனில் மாற்றங்கள்

பாலியல் துஷ்பிரயோகத்தின் அறிகுறிகள்
குழந்தையின் தோற்றம்
* கிழிந்த கறை படிந்த அல்லது இரத்தம் தோய்ந்த கீழ் ஆடை
* பிறப்புறுப்பு பகுதிகளில் வலி அல்லது அரிப்பு அனுபவித்தல்
* ஒரு பாலியல் ரீதியாக பரவும் தொற்று கொண்டிருப்பது

குழந்தையின் நடத்தை
* குழந்தையின் வயதிற்கு பொருத்தமற்ற பாலியல் நடத்தை அல்லது அறிவு.
* மற்ற குழந்தைகள் மீது பொருத்தமற்ற பாலியல் தொடுதல்
* நடத்தையில் திடீர் மாற்றம்
* எந்தவொரு வகையிலும் தொடப்படுவதற்கு அதீத தயக்கம்

 

MBIMB General 1

அதிகம் கேட்கப்படும் கேள்விகள் (குழந்தைகளால்)

கேள்வி: மக்கள் ஏன் குழந்தைகளை துன்புறுத்துகிறார்கள்?
பதில்: மக்கள் குழந்தைகளை துன்புறுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன, சிலர் தாங்களே துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் என்பதால் மற்றவர்களை துன்புறுத்தும் சுழற்சியை தொடர்கின்றனர். சிலருக்கு குடிப்பழக்கம், போதைப்பொருள் அல்லது கோபப் பிரச்சனைகள் இருக்கும் அதனால்தான் அவர்கள் குழந்தைகளை துன்புறுத்துகிறார்கள். நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளை துன்புறுத்துவது என்பது தவறு, அதனால்தான் நீங்கள் எப்போதும் யாரிடமாவது சொல்ல வேண்டும், எனவே நீங்கள் உதவி பெறலாம்.

கேள்வி: குழந்தைகளின் அந்தரங்க பாகங்களை மக்கள் ஏன் தொடுகிறார்கள்?
பதில்: மக்கள் குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதற்கு மீண்டும் பல காரணங்கள் உள்ளன, குழந்தைகளை துன்புறுத்தும் பலர் தாங்களே துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் அதனால்தான் அவர்களுக்கு உதவியும் சிகிச்சையும் தேவைப்படுவதால், அவர்கள் குணமடையலாம் மற்றும் இனி குழந்தைகளை காயப்படுத்தாமல் இருக்க முடியும் என்பதால் சொல்ல வேண்டியது அவசியம்.

கேள்வி: யாரும் என்னை நம்பவில்லை என்றால் நான் என்ன செய்வது?
பதில்: நீங்கள் யாரிடமாவது சொன்னால் அவர்கள் உங்களை நம்பவில்லை என்றால் – பிறகு வேறு ஒருவரிடம் சொல்லுங்கள், யாராவது உங்களை நம்பும் வரை மக்களிடம் சொல்லிக்கொண்டே இருங்கள்.

அப்படி நான் சொன்னால் என்ன நடக்கும்?
பதில்: நீங்கள் துன்புறுத்தப்படுகிறீர்கள் என்று அவர்கள் ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.
பின்னர் யாரோ ஒருவர் வந்து உங்கள் குடும்பத்துடன் பேசுவார். நீங்கள் வீட்டில் தங்குவது பாதுகாப்பானதா அல்லது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய வேறு எங்காவது செல்ல வேண்டுமா என்று அவர்கள் பார்ப்பார்கள்.


கேள்வி: நான் வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் நிறுத்தவில்லை என்றால் நான் என்ன செய்வது?
பதில்: நீங்கள் வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் நிறுத்தவில்லை என்றால் – மிகவும் சத்தமாக கத்துங்கள் ஒருவேளை அங்கே யாராவது இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு உதவலாம், அல்லது உங்களுக்கு தெரியும் சுற்றி இருப்பவர்கள் வந்து உங்களுக்கு உதவுபவர்கள். அங்கே யாரும் இல்லை என்றால், பிறகு சென்று யாரிடமாவது சொல்வது பாதுகாப்பானது.

கேள்வி: ஒருவேளை நான் அதை சொன்னால் என்னையோ அல்லது என் குடும்பத்தில் உள்ள ஒருவரையோ அவர்கள் காயப்படுத்துவார்கள் என்று பயமுறுத்தினால் நான் என்ன செய்வது?
குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள விரும்பமாட்டார்கள், அதனால் அவர்கள் உங்களையோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரையோ அச்சுறுத்தி ரகசியங்களை காக்கச் சொல்லலாம். நீங்கள் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் பிரச்சனையை யாரிடமாவது சொல்ல வேண்டும்.

கேள்வி: ஒருவேளை என் சகோதரனோ அல்லது சகோதரியோ என்னை துஷ்பிரயோகம் செய்தால் நான் என்ன செய்வது?
பதில்: உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள், மேலும் ஒருவேளை அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் பள்ளியில் அல்லது நாம் விவாதித்த நபர்களின் பட்டியலிலிருந்து யாரிடமாவது சொல்லுங்கள்.

கேள்வி: நான் சொன்னால் அவர்கள் கோபப்படுவார்களா?
பதில்: எப்போதும் இல்லை, ஆனால் ஆமாம் அவர்கள் கோபமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும் மற்றும் சொல்ல வேண்டும் அப்போதுதான் அந்த நபர் உங்களை துன்புறுத்துவதையோ அல்லது உங்கள் அந்தரங்க பாகங்களைத் தொடுவதையோ நிறுத்துவார்.

 

Translate Our Website »